Saturday, 30 November 2024

வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா

புதிய கல்விக் கொள்கை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் புதுடில்லியிலுள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  

இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத்தலைவர் செ.மயில், மற்றும் செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், அகில இந்திய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- வேலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்  ஆ.ஜோசப்அன்னையா, மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ், ஆ.சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், பிரபுசாமிதாஸ், தினகரன் கோவிந்தன், எஸ்.ஜெயகாந்தன், விவேகானந்தன் சுப்பிரமணி, எஸ்.சங்கர் என்.செல்வமணி, கோகுலகிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன் மணி, கையிலைநாதன் ரகுநாத், கருணாகரப்பிள்ளை, கே.பிரேம்குமார், ஆர்.பிரபு, உள்ளிட்ட 20 பேர் பங்கேற்றனர்.

அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலத்திலிருந்து ஆசிரியர் கூட்டமைபினர் இந்த தர்ணா போராட்டத்திற்கு அகில இந்திய தலைவர் கே.சி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  அகில இந்திய பொதுச்செயலாளர் சி.என்.பார்தி சிறப்புரையாற்றினார். பொருளாளர் பி.சி.மொகன்தி, இணை பொதுச்செயலாளர் சுமார்பெயின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்ணா ஆர்ப்பாட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவதாசன் தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜாராம்சிங், மற்றும் சுதாமாபிரசாத் ஆகியோர் எஸ்.டி.எஃப்.ஐ-யின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர். இந்திய மாணவர் சங்க பொதுச்செயலாளர் மயூக் பிஸ்வாஸ், தேசிய தலைவர் வி.பி. சானு, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய தலைவர் சுபாஷ் லம்பா ஆகியோர் பேசினர்.

இதில் தமிழ்நாட்டிலிருந்து தமிழக அளவில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் அகில இந்திய துணைத்தலைவர் சா.மயில்,  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மற்றும் அகில இந்திய செயலாளர் அ.சங்கர் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை, மாநில பொருளாளர் ட்டி.கணேசன்,  எஸ்.டேவிட்ராஜன் உள்பட தமிழ்நாட்டைச் சார்ந்த 500 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...