வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் கார்த்திக் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வைத்த பொறியில் சிக்கியுள்ளார், பயனாளியிடம் லஞ்சம் பெற்று வசமாக சிக்கிய முதல்நிலை வருவாய் ஆய்வாளருடன், உதவியாளரும் கையும் களவுமாக லஞ்சப்பனத்துடன் கைது!
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குட்பட்ட பெரிய கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவர் ஓடைப் பகுதி ஆக்கிரமிப்பை எடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த மனுவின் அடிப்படையில் ஓடைப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்றால் ரூபாய் 15,000 லஞ்சமாக கொடுத்தால் அந்த வேலை செய்து தருவதாக மனுதாரரான யோகேஸ்வரனிடம் முதல்நிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனுதாரர் யோகேஸ்வரன் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாமல் இதுகுறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் பொடி தடவப்பட்ட 500 ரூபாய் 30 தாளென ரூபாய் 15 ஆயிரம் நோட்டுக்களை யோகேஸ்வரனிடம் கொடுத்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரரான யோகேஸ்வரன், அங்கு பணியிலிருந்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கின், உதவியாளர் முருகன் மணியின் மூலம் 15,000 ரூபாய் லஞ்சப்பணத்தை கொடுக்க முருகன் மணியின் லஞ்ச கையூட்டுப் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு மாறுவேடத்தில் பதுங்கியிருந்த சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட போலீசார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் மற்றும் அவரின் உதவியாளர் முருகன் மணியின் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment