Thursday, 21 November 2024

கந்தர்வ கோட்டை அருகே தேசிய நூலக வார விழா நடந்தது!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வானவில் மன்றம் சார்பில் தேசிய நூலக வார விழா கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளரும் அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா தேசிய நூலக வார விழா குறித்து பேசும் பொழுது  இந்திய நூலக சங்கம் 1968 முதல் நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய நூலக வாரமாக  இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.

தேசிய நூலக வாரம் என்பது, நம் சமூகத்தை வலுப்படுத்துவதில் நூலகங்கள். நூலகர்கள் மற்றும்  நூலகப் பணியாளர்கள் ஆற்றும்  மதிப்புமிக்க பங்கை எடுத்துரைக்கும்   ஆண்டு  விழாவாகும். நூலக வார விழா  மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் நூலகங்களில் புத்தகங்களை பாதுகாப்பாக சேமிக்கும் கோலன் தொகுப்பு முறையை உருவாக்கியவர். இந்தியாவில் நூலகத்துறையின் வளர்ச்சிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர்.  இந்திய நூலக அறிவியல் ஆவணக்காப்பக மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று போற்றப்படுகிறார் என்று பேசினார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி பள்ளி நூலகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது ‌‌. மாணவர்கள் ஆர்வமுடன் நூலக புத்தகங்களை எடுத்து வாசித்தனர். காந்தி, ராமராஜர், அறிஞர் அண்ணா, விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள், சட்ட நூல்கள், அறிவியல், நூல்கள், அறிவியலில் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் நூலக வார விழாவை முன்னிட்டு நூல்களை வாசித்து மகிழ்ந்தனர். தினந்தோறும் நூலகங்களுக்கு செல்ல வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. நிறைவாக ஆங்கில ஆசிரியர் சிந்தியா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...