30,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் வீடு கட்ட அனுமதிக்க முடியும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் சரவணராஜ் கறாராக கேட்டுள்ளார். கோபமடைந்த மனுதாரர் சுபாஷ் ராஜ்குமார் லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய நிலையில், போலீசார் வைத்த பொறியில் சிக்கிய செயல் அலுவலர் தற்போது லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த உதகைமண்டலத்தில் அரசு மற்றும் தனியார் தரப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் நடைமுறையில் இருந்து வரும் சூழலில் தடைசெய்யப்பட்ட கனரக இயந்திர பயன்பாட்டுக்கான அனுமதி மற்றும் காட்டேஜ் கட்டுமான அனுமதிகளை உதகை மண்டலத்திலுள்ள ஜெகதளா பேரூராட்சி நிர்வாகத்தினரும், வருவாய்த் துறையினரும் பல லட்சம் ரூபாய் லஞ்சக் கையூட்டு வாங்கிக்கொண்டு அனுமதி வழங்குவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில், குன்னூர் அருகிலுள்ள ஜெகதளா பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் சுபாஷ் ராஜ்குமார் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டுவதற்காக முறையாக அனைத்து ஆவணங்களையும் கொண்டு விண்ணப்பம் செய்துள்ளார். பின்னர் அது குறித்து ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலரிடம் அணுகியுள்ளார். ஆனால், செயல் அலுவலர் சரவணராஜ் உங்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டுமென்றால் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேரூராட்சியின் செயல் அலுவலர் சரவணராஜ் கூறி லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபாஷ் ராஜ்குமார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை புகார்தாரரான சுபாஷ் ராஜ்குமாரிடம்
கொடுத்து லஞ்சம் கேட்ட பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள், அதன்படி சம்மந்தப்பட்ட புகார் தாரரான சுபாஷ் ராஜ்குமார் ஜெகதளா பேரூராட்சிக்கு சென்ற அங்கு பணியில் இருந்த செயல் அலுவலர் சரவணராஜியிடம் லஞ்சப் பணத்தை கொடுக்க அந்த லஞ்சத்தை வாங்கிய செயல் அலுவலர் சரவணராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்.
பின்னணி குறித்து தெரிவித்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார், "வீடு கட்ட அனுமதி கேட்டு வந்தவர். ஜெகதளா பேரூராட்சியைச் சேர்ந்த சுபாஷ் ராஜ்குமார் என்பவரிடம் செயல் அலுவலர் சரவணராஜ் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். சம்மந்தப்பட்ட நபரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினோம். பேரூராட்சி அலுவலகத்தில் சரணவனராஜ் லஞ்சம் வாங்கும் போது ஆதாரத்துடன் பிடித்தோம். அவர் மீது ஊழல் தடுப்பு வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளோம். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் லஞ்ச கையூட்டுப் பெற்ற இச்சம்பவம் உதகை மண்டலத்திலுள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் மற்ற செயல் அலுவலர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment