மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று வழக்கு விசாரணையில்,
நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சூழலில் விவாகரத்து வழக்கு விசாரணையை டிச.7 ஆம் தேதியன்று தள்ளி வைப்பு!..
தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள் சமீப காலமாகவே விவாகரத்துக்கான நீதிமன்றத்தை நாடும் நிலைமை அதிகரித்து வருகிறது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான், நடிகரும் பாடகருமான ஜி.வி பிரகாஷ், பிரபல திரைப்பட முன்னணி நடிகர் தனுஷ், பாடகர் யுவன் சங்கர் ராஜா, இவர்களைத் தொடர்ந்து, விவாகரத்து வழக்கில் பிரபல நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு இன்று நேரில் ஆஜராகினர். இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை டிச.7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்தார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009 ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நடந்து வருகிறது. நீதிபதி இருவருக்கு இடையான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த வாரம் இருவரும் 10 நிமிடங்கள் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமரச தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி ஆகிய இருவரும் இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு ஆஜரான நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி ஆர்த்தியிடம் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விசாரணையை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.
No comments:
Post a Comment