Tuesday, 26 November 2024

பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தொடரும் அவலம்: வஜ்ஜிரம் கம்பெனி கழிவு நீர் மண் தரையில் வெளியேற்றம்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் முக்தியார் என்பதற்கு சொந்தமாகக் கூறப்படும் வஜ்ஜிரம் கம்பெனியிலிருந்து பிளாஸ்டிக் பை மூலமாக சுத்திகரிக்கப்படாத வஜ்ஜிரம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இவ்வாறு மண்தரையில் கழிவுநீரை வெளியேற்றுவதாகவும்  இந்த கழிவு நீரை வெளியேற்றினால் நல்ல குடிநீர்  உப்பு நீராகும் தன்மையை அடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இதுபோல் இவ்வாறு வஜ்ஜிரம் கம்பெனி கழிவு நீரை வெளியேற்றினால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக வஜ்ஜிரம் காய்ச்ச விறகுகளைத் தான்  பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த வஜ்ஜிரம் கம்பெனியில் விறகுகளுக்கு பதிலாக மாடுகளின் கழிவுகளான ஜவ்வு, சூரா, காய்ந்த கொழுப்புகள் போன்றவற்றைக் கொண்டு அடுப்பை எரியூட்டுகிறார்கள். இதனால் இந்த கம்பெனியில் இருந்து மாசு கலந்து புகை வெளியேறி பொதுமக்களுக்கு குமட்டலையும், இருமலையும். ஏற்படுத்துகிறது.  இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேசனுக்கு மாதா மாதம் கப்பம் சென்று சேர்வதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் தரப்பிலும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் புகார் கூறப்படுகின்றது. எனவே இது குறித்து சென்னை கிண்டியிலுள்ள தலைமை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் கள ஆய்வு செய்து இது போல் தவறு செய்யும் வஜ்ஜிரம் கம்பெனியும் அதற்கு துணை போகும் வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வெங்கடேசன் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேர்ணாம்பட்டு நகர் வாழும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...