Saturday, 30 November 2024

உரிமம் பெறாதவருக்கு மறைமுகமாக அனுமதி வழங்கும் வேலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மீனூர் கிராமம், அக்ராவரம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் எம். குமாரசாமியின் மகன் கே. சேகர். இவர் இந்த மீனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து கேபிள் டிவியை இந்த பகுதியில் இவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரிடம் சுமார் 200க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் அரசு கேபிள் டிவி நடத்த மீனூர் கிராமத்திற்கு மனு செய்து குடியாத்தம் அடுத்த மீனூர் அக்ராவரம் ராஜீவ் காந்தி நகர் மீனூர் நடுக்கட்டை மீனூர் கீழ்நகர் ஆகிய பகுதிகளுக்கு கேபிள் டிவி நடத்த முறைப்படி அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்றுள்ளார் சேகர். அரசு கேபிள் டிவி நிறுவனமும் உரிமத்தை இவருக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் சேகர் தொடர்ந்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அரசு கடந்த 13.09.2019 ஆண்டு எல்சிஓ எண்: 50929 வழங்கியுள்ளது. இதில் அந்த அரசு ஆணை எண்: B14/207001/2019. ஆனால் தற்போது அதே அரசு கேபிள் டிவி மூலம் அக்ராபவரம் நடுக்கட்டை கீழ் நகர் , ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு இதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அரசு கேபிள் டிவி இணைப்புகளை கொடுத்துள்ளார். அத்துடன் அவர் குறைந்த வாடகைக்கு கேபிள் டிவி நடத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இதை தொடர்ந்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் சேகருடைய கேபிள் டிவி இணைப்பு அதிகமாக மாற்றப்பட்டு வருகிறது என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது. இதனால் சேகருடைய சந்தாதாரர்கள் அவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அவர்கள் புதியதாக வாங்கிய இணைப்பை பார்த்தால் அது அரசு செட்டாப் பாக்ஸ் ஆக உள்ளது. இதனால் சேகர் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் தொழில் செய்வதற்காக ஒயர் மற்றும் தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி நஷ்டம் அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொழிலில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிய வருகிறது. அரசு கேபிள் டிவி சிக்னல் அக்ரவாரத்தில் இருந்து தருமாறு சேகர் கேட்டுள்ளார். ஆனால் அக்ராவரம் வழியாக சேம்பள்ளிக்கு ஐந்து கிலோ மீட்டர் அளவிற்கு சென்று மீண்டும் ரிட்டர்ன் வந்து அக்ராவரத்தில் சேகருக்கு சிக்னல் கொடுத்துள்ளனர். இதனால் அடிக்கடி இந்த ஒயர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் சரியாக கிடைக்காததால் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சேகரிடம் புகார் தெரிவித்து அடிக்கடி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக போன் மூலம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இவர் ஏற்கனவே துணை மேலாளருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே முறைப்படி கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தின் பேரில் இதுநாள் வரையில் அந்த மனுவின் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கேபிள் டிவி சந்தாதாரர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் இந்த பகுதியில் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி சேகருக்கு வழங்கிய உரிமத்தில் பாலாஜி என்ற நபர் முறைகேடாக புகுந்து முறைப்படி எந்தவித அனுமதியும் பெறாமல் இவர் தொழில் நடத்துகிறார். ஒரு உறையில் ஒரு கத்தி வைக்க வேண்டிய இடத்தில் இரண்டு கத்தியை சொருக பார்க்கிறது அரசு கேபிள் டிவி நிறுவனம். இதற்கு முழுமையாக துணை செல்வது கேபிள் டிவி நிறுவனத்தில் பணியாற்றும் முத்துக்குமார் என்று கதறப்படுகிறதூ. இந்த விஷயத்தில் அவர்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து தனியாக லாபம் பார்க்கிறார் என்பதும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது சேகருக்கு மட்டும் நடக்கும் அநீதி அல்ல. இதுபோல பலருக்கு முத்துக்குமார் அநீதியை இழைத்து வருவதும் ஒரு  சில ஆப்ரேட்டர்கள் தரப்பில் புகாராக தெரிவிக்கப்படுகிறது. இதில் இப்படி திருட்டுத்தனமாக அரசு கேபிள் டிவி நடத்தும் பாலாஜி என்பவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம், நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சார கணக்கெடுப்பு நடத்தும் அசசராக பணியாற்றி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. இவர் முறைகேடாக இது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குடியாத்தத்தில் ரமேஷ் என்பவர் நடத்தும் கேபிள் டிவி ஆப்ரேட்டரிடம் இருந்து எல் சி ஓ செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வந்து இவர் இந்த குடியாத்தம் அக்ராவரம் கிராமத்தில் தொழில் நடத்தி வருகிறார் என்பது தெரியவந்துள்ளது .அதாவது இவர் குடியாத்தம் அக்ராவரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் முத்துக்குமாரின் முழு ஆசியோடு இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அசசராக பணிபுரியும் பாலாஜி இப்படி தைரியமாக ஏற்கனவே அந்த பகுதியில் முறைப்படி உரிமம் பெற்று சேகர் நடத்தி வரும் தொழிலுக்கு இடையூறாக இவர் தனது வேலையை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .வேலூர் மாவட்டம் கேபிள் டிவி  தாசில்தாராக பணியாற்றி வரும் வெங்கட் குமார் என்பவருக்கு கேபிள் டிவி நிறுவனத்தில் நடக்கும் தில்லுமுல்லு தில்லாலங்கடி வேலைகள் எதுவும் தெரியாது என்பதும் குறிப்பாக தெரியவந்துள்ளது. இதனால் முத்துக்குமார் காட்டில் கனமழை பெய்து வருகிறது. புகார் மற்றும் கடிதம் ஏதாவது கொடுத்தால் வாருங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கட்டப்பஞ்சாயத்து பேசுவதற்கு அழைப்பதாகவும் இவர் மீது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சரமாரியாக புகார்களை தெரிவித்து வருகின்றனர். இவர் தொடர்ந்து வேலூரிலேயே கோலோச்சி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆதலால் வேலூர் மாவட்ட அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் நடைபெறும் தில்லுமுல்லு தில்லாலங்கடி வேலைகளை இத்துடன் நிறுத்திவிட்டு முறைப்படி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே நடத்த வேண்டும். ஒரு இடத்தில் உரிமம் பெற்று நடத்தும் ஏரியாவில் மற்றொருவர் தொழில் செய்வதாக கூறி இடையூறு ஏற்படுத்துவது சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. முறைப்படி உரிமம் பெற்றவர்களுக்கு பாதுகாப்பும் அவர்களுக்கு இடையூறு இன்றி தொழில்நடத்தவும் உதவி செய்ய வேண்டிய கேபிள் டிவி நிறுவனம் தவறான நபர்களிடம் கையூட்டை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு துணை போவது எவ்வகையில் நியாயம் என்பது தெரியவில்லை என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள். ஆக மொத்தத்தில் வேலூர் மாவட்டத்தில் நடக்கும் அரசு கேபிள் டிவி நிறுவன தில்லாலங்கடி வேலைகள் இத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்படுமா? அந்தந்த ஏரியாவில் உரிமம் பெற்றவர்கள் முறைப்படி தொழில்நடத்திக் கொள்ள வழிவகை செய்யுமா? வேலூர் கேபிள் டிவி நிர்வாகம் என்பதை வேலூர் மாவட்ட நிர்வாகம் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் உரிமம் பெற்று கேபிள் டிவி தொழில் நடத்தும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள். மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...