Sunday, 17 November 2024

அவசர கருத்தடை மாத்திரைகள் உட்பட அனைத்துவிதமான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் மருந்துச்சீட்டு இல்லாமல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்படுமா?

நாடு முழுவதும் இந்த தடையை மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) அமல்படுத்தக் கூடும் என்று வெளியான செய்திகளால் தற்போது அவசர கருத்தடை மாத்திரைகள் தொடர்பான விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.

இந்த மாத்திரைகளை நேரடியாக மருந்தகங்களில் வாங்க தேசிய அளவில் தடை ஏற்படலாம் என்று பெண்களும், பெண்கள் நல ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். தேவையற்ற கர்ப்பத்திற்கு இந்த தடை வழிவகை செய்யும் என்றும், இது பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் இதுபோன்ற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். அதனால்தான், முன்பு இதனை மருந்தகங்களில் விற்க அனுமதி இல்லாமல் இருந்தது.

அவசர கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கான கருத்தடை சாதனங்களில் முக்கிய ஒன்றாக 2002-ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பிறகு, தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க இந்த மாத்திரைகள் அடுத்த 72 மணி நேரத்திற்குள் பெண்களால் உட்கொள்ளப்படுகிறது. இதனை வாங்குவதற்கு பெண்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க, நேரடியாக மருந்தகங்களில் இருந்து இந்த மாத்திரையை பெண்கள் எந்தவித சிரமமின்றி பெற்றுக் கொள்ள வழி செய்யும் வகையில் இந்த மருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் சமூக ரீதியாக இதற்கு மறைமுக தடை இருந்தே வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சி.டி.எஸ்.சி.ஓ-வால் (Central Drugs Standard Control Organisation (CDSCO)) நடத்தப்பட்ட தேசிய அளவிலான 62வது மருந்து ஆலோசனைக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு, அவசர கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் நேரடியாக விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

அதனைத் தொடர்ந்து 6 பேர் அடங்கிய மருத்துவ துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் அவசர கருத்தடை மாத்திரைகள் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தடை விதிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த முடிவை மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிற்கு பரிந்துரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகள் 1945 (Drugs and Cosmetic Rules of 1945)-ல் திருத்தம் செய்து, அவசரக் கருத்தடை மாத்திரைகள் உட்பட அனைத்து வகையான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை விதிக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது என அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

அவசரக் கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை விதிக்க எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் இது குறித்து கூறுவது என்ன?

கருத்தடை மாத்திரைகள் மற்றும் அவசர கருத்தடை மாத்திரைகளுக்கு வேறுபாடு உண்டு. இந்தியாவில் கருத்தடை மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே விற்பனைக்கு வைக்கப்படுகிறது. அவசர கருத்தடை மாத்திரைகள் அவசர தேவையின் நிமித்தமாகவே பயன்படுத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பற்ற பாலுறவுக்கு பிறகு (கருத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் நடக்கும் பாலுறவுக்கு பிறகு ) 72 மணி நேரத்தில் இந்த மாத்திரைகள் உட்கொள்ளப்படும் போது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைகிறது.

சில நேரங்களில் கருத்தடை சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள் காரணமாகவும், உதாரணமாக ஆணுறை கிழிந்து போகும் போது, பாதுகாப்பு கருதி இத்தகைய மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 'தேசிய கருத்தரிப்பு மற்றும் குழந்தை ஆரோக்கியம்' திட்டத்தின் கீழ் இத்தகைய மருந்துகள் மருந்துச்சீட்டு ஏதுமின்றி பெண்கள் பெற்றுக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி செய்திருந்தது.

இந்த மாத்திரை தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கிறது. கருக்கலைப்பு போன்ற அபாய சூழலை பெண்கள் எதிர்கொள்வதையும் தடுக்கிறது.

உலக சுகாதார அமைப்பு, அவசர கருத்தடை மாத்திரைகள் மற்றும் சாதனங்கள் (copper-bearing intrauterine devices) - பாதுகாப்பற்ற பாலுறவுக்கு பிறகு 5 நாட்களுக்குள் பயன்படுத்தும் போது 95% கர்ப்ப அபாயத்தை தடுக்கிறது என்று கூறுகிறது.

மேலும் மிதமான தலைச்சுற்றல், குமட்டல், லேசான உதிரப்போக்கு போன்றவற்றை இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும், சோர்வு ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதியன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விவாதத்திற்கு வைத்த நிரலில், மருந்து விதிகள் 1945, பிரிவு 96(1)(xi) கீழ் அட்டவணை ஹெச் (Schedule H)-ல் வைக்கப்பட்டுள்ள அவசர கருத்தடை மாத்திரைகளை, அட்டவணை கே (Schedule K)-க்கு மாற்றி, மருந்தகங்களில், மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த மாத்திரைகளின் பயன்பாட்டை கண்டறிந்து அவற்றிற்கு தடை தேவையா என்பதை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட துணை மருத்துவக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பெண்கள் இதனை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே ஆரம்ப காலத்தில் இந்த மாத்திரைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டு வந்தது,

அவசர கருத்தடை மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகள் என்பதால் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும். நாங்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்கள் தீவிர இரத்தப் போக்கை சந்திக்கின்றனர். அவர்களை இது போன்ற அபாயத்திலிருந்து காக்கும் பொருட்டே மருந்துச்சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது.

இந்த மாத்திரைகளை 72 மணி நேரத்தில் உட்கொண்டால் மட்டுமே கர்ப்பத்திற்கான அபாயத்தை தவிர்க்க இயலும் என்ற சூழலில் மருத்துவ ஆலோசனை என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் சாத்தியமா என்ற கேள்வியை வைத்த போது, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது.

ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான கருத்தடை சாதனங்கள் கிடைக்கின்றது. தேவையற்ற கர்ப்பம் மட்டுமின்றி எச்.ஐ.வி. தொற்றில் இருந்தும் இது போன்ற சாதனங்கள் பாதுகாப்பு அளிக்கின்றது.

மருத்துவ ஆலோசனை இன்றி இந்த மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இந்த மாத்திரைகளை எளிதில் வாங்கிவிட இயலாது.

பெரும்பாலான இடங்களில் இந்த மாத்திரைகளை மருந்தகங்கள் வைத்திருப்பதில்லை. அப்படியே வைத்திருந்தாலும் அந்த மாத்திரைகளை மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.

அதிலும் சென்னையில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களில் மட்டுமே அவசர கருத்தடை மாத்திரைகள் உள்ளன. எங்களை நாடி வரும் மக்களுக்கு நாங்கள் அந்த மருந்தகங்களின் முகவரிகளை வழங்கிவிடுவோம். அவர்கள் நேரடியாக மருந்தகங்களில் சென்று வாங்கிக் கொள்வார்கள்," என்று விவரிக்கிறார் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்.

இந்த மாத்திரைகளை, பாலுறவுக்கு பிறகு 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு எடுத்துக் கொண்டால் இதனால் எத்தகைய பலனும் இல்லை.

இதனையும் மீறி மருத்துவமனைக்கு சென்றால் ஒரு பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா? யாருடன் இருந்தார்? ஏன் திருமணத்திற்கு முன்பு பாலுறவில் ஈடுபட்டார் என்பது போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்படுகின்றன. அதனை தவிர்க்க மருந்தகங்களிலுள்ள அவசர கருத்தடை மாத்திரைகள் அவர்களுக்கு பல நேரங்களில் கை கொடுக்கின்றன.

ஆனால், இது குறித்து மேலும் விரிவாக பேசும் போது "திருமணமாகாத பெண்கள் மட்டுமே இத்தகைய மருந்துகளை நாடுவதாக ஒரு தவறான எண்ணம் நம்மில் பலரிடமும் உள்ளது.

என்னிடம் இந்த அவசர கருத்தடை மாத்திரைகளை தேடி வரும் பெண்களில் பலரும் திருமணமானவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் இருக்கலாம் அல்லது குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயாராக இல்லாத சூழலில் இருக்கலாம். கூட்டுக்குடும்ப அமைப்பு ஆணுறைகள் போன்ற கருத்தடை சாதனங்களை வீட்டில் வைத்திருப்பதை இயல்பாக கருதும் சூழலை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை என்பதையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும், என்றும் கூறுகிறார் அவர்.

இங்கு ஆண்களை ஆணுறைகள் போட்டுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்திவிட இயலாது. பல நேரங்களில் பெண்கள் இதற்கு எதிர்ப்பு சொல்லவும் கூட முடியாத நிலையில் தான் வாழ்கின்றனர். தங்களின் விருப்பத்திற்கு மாறாக, கருத்தடை சாதனங்கள் ஏதுமின்றி நடைபெறும் பாலுறவு மூலமாக கர்ப்பம் தரிக்க விரும்பாத பெண்களும் இந்த மாத்திரைகளை நாடுகின்றனர். திருமண உறவில் இருக்கும் தம்பதியினர் மத்தியில் வற்புறுத்தி நிகழும் பாலுறவுகள் பற்றிய பேச்சுகளே இங்கு எழுவதில்லை. இது போன்ற விவகாரங்களை மருத்துவமனையில் மருத்துவர்களிடம் சொல்வதற்கு பதிலாக, நேரடியாக மருந்துகளை பயன்படுத்திக் கொள்வது பெண்களுக்கு எளிமையானதாக இருக்கிறது.

திருமணம் ஆனவர்களோ, ஆகாதவர்களோ கருத்தடை என்று வரும் பட்சத்தில் அதன் பொறுப்பும் கூடுதல் சுமையும் பெண்களுக்கே ஏற்படுகிறது.

திருமணம் ஆன பெண்களில் 38% பேர் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். 5வது தேசிய குடும்ப நல ஆய்வின் படி, குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு அடுத்த இடத்தில் ஆணுறைகளும் (10%), மாத்திரைகளும் (5%) இடம் பெற்றுள்ளது.

அதே ஆய்வில் 0.1-க்கும் குறைவான பெண்களே அவரச கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 33% பெண்கள் எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பின்பற்றவில்லை என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

மிகவும் குறைவான பெண்களே இதனை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஆய்வு முடிவு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏதோ ஒரு வகையில் இதற்கான தடை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் எதன் அடிப்படையில் பெண்களுக்கு இதனால் பாதிப்பு வருவதாக அரசு தெரிவிக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) இத்தகைய மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுமையாக பரிந்துரை செய்கிறது. குறுகிய காலத்தில் எடுத்துக் கொள்ளப்படும் இத்தகைய மருந்துகளால் எந்த விதமான பாதிப்பும் பெண்களுக்கு ஏற்படாது என்றும் மேற்கோள்காட்டுகிறது.

உண்மையில் அளவுக்கு அதிகமாக எந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் அதையே காரணமாக வைத்து, பெண்களுக்கு எளிதில் கிடைக்கும் கருத்தடை சாதனங்களுக்கு அரசு தடை விதிக்கக் கூடாது.

தனியார் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்களில் இந்த மாத்திரைகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலுள்ள குடும்ப கட்டுப்பாடு பிரிவுகளில் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் ஆரம்ப சுகாதார மையங்கள் மாலை நேரங்களில் செயல்படுவதில்லை..?

எத்தனை நாட்களுக்கு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்? தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன? நீண்ட நாள் கருத்தடை தேவை என்கின்ற பட்சத்தில் அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு தருவது மட்டுமே அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

பெண்கள் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? ஒரு இக்கட்டான சூழலில் மருத்துவமனை நோக்கி வரும் போது அவர்களை மரியாதையுடன் கையாள என்ன மருத்துவ அமைப்புகள் நம் கைவசம் உள்ளன? இது போன்ற கருத்தடை சாதனங்கள் நகரங்கள் மட்டுமின்றி சிற்றூர்களிலும் கிடைக்க எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்," என்று கூறுகிறார் அர்ச்சனா.

மருந்தகங்களில் முறையான மருந்துச்சீட்டு இன்றி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டால், இங்கே இதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யவார்கள். போலி மருத்துவர்களும், போலி மருந்துக்கடைகளும் இதனால் உருவாகும். அங்கே தான் இத்தகைய மாத்திரைகள் தவறாக பயன்படுத்தப்படும்.

பெண்களோ கருத்தடை என்று வரும் பட்சத்தில் அதன் பொறுப்பும் கூடுதல் சுமையும் பெண்களுக்கே ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...