தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக பெண் ஆசிரியை ரமணி என்பவர் படுகொலை செய்யப்பட்டதற்கு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார். முன்னதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குப்புராமன் வரவேற்று பேசினார்.
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கண்டன உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் தீன தயாளன் தொடக்க உரையாற்றினார்.
ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் வாரா ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதயக்குமார் மாவட்ட பொருளாளர் சபிதா ஆகியோர் பேசினர்.
காட்டுமிராண்டித்தனமான இச்செயலை செய்தவருக்கு கடும் தண்டனை தமிழக அரசு வழங்கிட வேண்டும். இந்த கொடூரமான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து
அரசு பள்ளிகளில் யார் வேண்டுமானாலும் நுழைந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருப்பதால் தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை அரசு பள்ளிகளுக்கு செய்து தர கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment