Sunday, 24 November 2024

மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறைத் தலைவர்மயில்வாகனன் வேலூரில் ஆய்வு!

வேலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல்துறைத் தலைவர் மயில்வாகனன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் முன்னிலையில்  மதுவிலக்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில்
நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுவிலக்கை கட்டுப்படுத்த தேவையான நடைமுறைகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23.11.2024ம் தேதியன்று மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு
காவல்துறைத் தலைவர் அல்லேரி, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழக ஆந்திர எல்லை, கிறிஸ்டியான்பேட்டை
சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கு
ஆலோசனைகளை வழங்கி ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...