தமிழ்நாட்டில் முக்கிய ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரயில்வே காவல்துறை டிஜிபி-யாக வன்னியபெருமாள், மாநில மனித உரிமைகள் ஆணைய ஐஜி-யாக எஸ்.மல்லிகா, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக ராஜீவ் குமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை எஸ்பி-யாக முத்தமிழ், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐஜி-யாக அபிஷேக் தீக்ஷித் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிறகு தமிழகம் திரும்பி நிலையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாடு அரசில் பல மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக காவல் மற்றும் ஆட்சிப் பணியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாற்றம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 11ஆம் தேதி தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை செயலாளராகவு, சுற்றுலாத்துறை ஆணையாளர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராகவும், தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராகvஉம், தேசிய சுகாதார திட்ட இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டனர். இதேபோல், சிறு, குறு தொழில் துறை செயலராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டார்.
குறிப்பாக சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநராக இருந்த ஆர்த்தி., ஐஏஎஸ், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலக துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த மாற்றம் நிகழ்ந்து 15 நாட்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முக்கிய ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பிரிவு டிஜிபி ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஊர்க்காவல் படை டிஜிபி-யாக பதவி வகித்த வன்னிய பெருமாள், சென்னை ரயில்வே டிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி-யாக இருந்தால் மல்லிகா, சென்னை மனித உரிமைகள் ஆணைய ஐஜி-யாகவும், சென்னை ரயில்வே டிஐஜியாக இருந்த அபிஷேக் தீக்ஷித் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி-யாக பணியிட மாற்றம் பெற்றிருக்கிறார். மேலும், லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்-பி முத்தமிழ் செல்வி குற்ற விசாரணை பிரிவு எஸ்பி-யாகவும் மாற்றப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment