தமிழ்நாட்டில் தற்போது சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், நீர் வடிவதற்க்கு போதிய வடிகால் வசதிகளும் போதிய அளவில் இல்லை குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் மேட்டூரில் காலதாமதமாக தண்ணீர் திறந்ததாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழ்நிலையில் ஒரு போக. சாகுபடியாக சம்பா சாகுபடியை செய்துள்ளனர் டெல்டா மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்துள்ளனர் மயிலாடுதுறையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேரும் திருவாரூரில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேரும் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கரும் திருச்சி மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி கடைமடை பாசன பகுதியான மணமேல்குடி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் கறம்பக்குடி பகுதிகளில் சுமார் 25 ஏக்கரும் சாகுபடி செய்துள்ளனர் தற்போது பெய்து வரும் தொடர் மழையால்
திருவாரூரில் சுமார் 1000 ஏக்கரும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில்சுமார் 10 ஆயிரம் ஏக்கரும் அதே போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் தொடர் மழையால் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடி சங்கேந்தி பகுதிகளில் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது
தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக தொடர் மழை காரணமாக முத்துப்பேட்டை ஒன்றியம் கடலோர பகுதியாக இருப்பதால் போதிய வடிகால் வசதியில்லாததாலும் வடிகாலை துர்வாராததாலும் மழைநீர் வடிய வழியில்லை இந்த மழை தொடர்ந்தால் அந்த பகுதி குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சுழும் நிலை உள்ளது இனியும் மழை தொடருமேயானால் விவசாயிகள் தாங்கள் பயிரை காப்பாற்றுவது கேள்விகுறியே தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீட்டையும் மீதமுள்ள பயிர்களை உரிய வடிகால் வசதியை ஏற்படுத்தி காத்திட வேண்டும் தொடர் மழை பொருளாதார பிரச்சனையால் பெரும்பாலான விவாசாயிகள் பயிர் காப்பீட்டை இன்னும் செய்யவில்லை டெல்டா மாவட்ட காவேரி பாசன வாய்க்கால்களில் பொதுப்பணிதுறையால் A பிரிவு வாய்க்கால் மட்டும் தூர்வாரபடுகிறது. அதேபோல் இனி வரும் காலங்களில் B பிரிவு வாய்க்காலும் தூர்வாரப்பட வேண்டும் மற்றும் C, D பிரிவு வாய்க்காள் ஊரக வளர்சி மற்றும் வருவாய் துறையின் கீழ் வருவதால் அதற்க்கு போதிய நிதியை ஒதுக்கி தூர்வாரிட வேண்டும் தமிழக அரசு தூர்வாரும் பணியை தொடர்வதற்க்கு முன் அந்த அந்த மாவட்ட அளவில் விவசாயிகள் அடங்கிய குழுவை அமைத்திட வேண்டும் அவ்வாறு அமைக்கும் போதுதான் எது எதை தூர்வாரிட வேண்டும் என்பதை விவசாயிகள் மூலம் அறிந்து தூர்வாரப்பட்டால் இது போன்ற மழை பாதிப்பில் இருந்து பயிர்களை காப்பாற்ற முடியும் தமிழ்நாடு அரசு முறையான ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்கிடவும் மாழைநீர் வடிய உரிய வடிகால் வசதியையும் உடனடியாக ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என தமாகா விவசாய அணி தலைவர் துவார் சி.ரெங்கராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment