தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 41 செ.மீ. மழை கொட்டியது. இந்நிலையில் ராமநாதபுரம், ராமேசுவரம், பாம்பனில் 2-வது நாளாக நேற்று கனமழை கொட்டியது. பாம்பனில் கடந்த 24 மணி நேரத்தில் 35 செமீ மழை பெய்த காரணத்தால், அந்த பகுதிகளிலுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக டெல்டா, தென் மற்றும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக சொல்வது என்றால், கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. புனித தலமான ராமேசுவரத்தை பொறுத்த்வரை நேற்று காலை மழை சற்று ஓய்ந்திருந்தது. ஆனால் மீண்டும் காலை 10 மணி முதல் சாரல் பெய்யத்தொடங்கியது. பின்னர் மதியம் வாக்கில் பலத்த மழை பெய்தது. பின்னர் மாலை வரையில் சாரலாக பெய்தது.
இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் ராமேஸ்வரத்திலுள்ள தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக ராமேஸ்சவரம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலை மற்றும் நகராட்சி சுங்கச்சாவடி அமைந்துள்ள சாலை உள்பட நகரின் பல தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதேபோல் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளையும் மழை நீர் சூழ்ந்திருக்கிறது. தெருக்கள் எல்லாம் தண்ணீர் வழிந்தோடும் கால்வாய்கள் போல் மாறிக்கிடப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகளும், தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராமேஸ்வரத்தில் இப்படி என்றால், ராமேஸ்வரத்தின் நுழைவு பகுதியான பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் மிக கனமழை பெய்தது. கருமேகங்கள் சூழ்ந்து பயமுறுத்தும் வகையில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தோப்புக்காடு, சின்னப்பாலம், உள்ளிட்ட இடங்களில் வீடுகளின் உள்ளேயும் தண்ணீர் புகுந்தது . இதேபோல் பாம்பனை ஒட்டியுள்ள தெற்குவாடி, நடுத்தெரு உள்ளிட்ட கிராமங்களிலும் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. தோப்புக்காடு பகுதியில் மரம் முறிந்து விழுந்த காரணத்தால் மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் அந்த கிராமத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 41 செமீ மழை பெய்யும், நேற்று காலையில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. எனினும் நேற்று காலை 10 மணிக்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டே இருந்த காரணத்தால். அனைத்து பள்ளிகளுக்கும் பகல் 1 மணி வரை இயங்கின. அதன்பிறகு அரை நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டது.
ராமநாதபுரத்தை பொறுத்தவரை ராமேஸ்வரத்துடன் ஒப்பிடும் போது மிககனமழை என்று கூறமுடியாது. நேற்று முன்தினம் இரவிலும், நேற்று காலையிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. பின்னர் சாரல் மழையும் பெய்தது. எனினும் தாழ்வான பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி வடியாத நிலை இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் நேற்று காலை 9 மணிக்கு மேல் மீண்டும் கனமழை பெய்ததால் மழைநீர் வடியாமல் மீண்டும் தேங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கனமழையால் சூழ்ந்தவெள்ள நீரை வெளியேற்ற தூய்மை பணியாளர்கள் கடுமையான போராடி வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் மொத்தம் 16 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும். 13 பகுதிகள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினார்கள். சென்னையில் கனமழை என்றால் உடனே ஓடிவந்து அறிவிக்கும் அதிகாரிகள். நேற்று மிக கனமழை பெய்த போதும், பெரும்பாலான பள்ளிகளுக்கு நேற்று விடுமுறையை முறைப்படி அறிவிக்கவில்லை.அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதால் பல பள்ளிகள் விடுமுறை அறிவிக்கவில்லை.. இதனால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றார்கள்.. ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் தான் நேற்று விடப்படடது. இதனிடையே ராமேஸ்வரம் தீவுப் பகுதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment