Sunday, 17 November 2024

மத்திய நிதி ஆணையக் குழுவின் 16வது, குழுவினர் இன்று முதல்வருடன் முக்கிய ஆலோசனை.. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஆய்வுகள்!

மத்திய நிதிக்குழு ஆணையத்தின் 16-வது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த ஆலோசனையில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிா்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280-வது பிரிவின் கீழ் மத்திய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரங்களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 வருடங்களுக்கு ஒரு முறை அனைத்து மாநிலத்திற்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தவகையில், 16-வது நிதி குழு ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், நேற்றைய தினம் சென்னை வந்தது. இந்த குழுவில் நிதி ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜாா்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காண்டி கோஷ், செயலா் ரித்விக் பாண்டே, இணைச் செயலா் ராகுல் ஜெயின் உள்பட 12 போ் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே நேற்று சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பி, கிண்டியிலுள்ள ஒரு தனியாா் ஹோட்டலுக்கு நிதி ஆணையக் குழுவினா் சென்றனர். பிறகு அங்கிருந்து நங்கநல்லூர் சென்று, ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜனை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனா். இரவு 7.30 மணிக்கு தனியாா் ஹோட்டலுக்குத் திரும்பிய குழுவினா் அங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பாா்வையிட்டு இரவு விருந்தையும் நிறைவு செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை 9 30 மணியளவில் தனியாா் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன. அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர், துறைசார்ந்த அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

சென்னை ஜார்ஜ் கோட்டை தலைமை செயலகத்தில் 16வது நிதி ஆணைய குழுவினருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு 16வது நிதிக்குழுவினர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
மதிய உணவை அங்கேயே நிறைவு செய்யும் ஆணையக் குழுவினர், தொழில் துறை மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். மாலை 5.30 முதல் 6 மணி வரை செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் நிதி ஆணையக் குழுவினர், இரவு தனியார் ஹோட்டலில் தங்குகிறார்கள்.

19-ம் தேதியன்று கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி ஆலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று தொழிலாளா்களுக்கு அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிடுகின்றனர். பிற்பகலில் சென்னை விமான நிலையம் சென்று அங்கே மதிய உணவை முடித்துக் கொள்கின்றனர்.

பின்னர், சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றனர். இரவு ராமேசுவரம் கோயிலில் ராமநாத சுவாமியை சாமி தரிசனம் செய்கின்றனர்.

20-ம் தேதியன்று காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினர், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பாா்வையிடுகின்றனர். தொடா்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மையத்தை பாா்வையிடுகின்றனர். பிற்பகல் மதிய உணவை மதுரையில் முடித்துக் கொண்டு பின்னர், சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள்.





No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...