சேலத்தில்: லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலக வணிக ஆய்வாளர், போர்மேன் இருவரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வைத்தப் பொறியில் சிக்கியுள்ளனர்
சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(40வயது), லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரின் சொந்த வீட்டின் மேல் தளத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு மற்றும் மீட்டர் மாற்றி தரக்கோரி, மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாமதமானதால் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விபரம் கேட்டுள்ளார்.
அப்போது வணிக ஆய்வாளர் மணி(46வயது) தனக்கு, 3,000 ரூபாயும், போர்மேனுக்கு, 1,000 ரூபாயும் தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் தன் புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்க வைக்க முடிவு செய்தார். பின்னர் இது குறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி..
புதியதாக கட்டப்பட்ட வீட்டிற்கு மின் மற்றும் மீட்டர் மாற்றி தரக் கோரியவரிடமிருந்து, ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்ட வணிக ஆய்வாளருடன், போர்மேனுக்கு ரூ.1000 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஊழியர்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டி விட முடிவுசெய்த மணிவண்ணன் இது குறித்து. சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிக்குமாரிடம் புகார் அளிக்க அவரின் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய புகார் தாரரான மணிவண்ணிடம் லஞ்சப்பணத்தை லஞ்சம் கேட்ட மின்வாரிய ஊழியர்களிடம் கொடுக்கும்படி கொடுத்து அனுப்பி வைத்தனர்.
பிறகு மணிவண்ணன் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியிலிருந்த வணிக ஆய்வாளர் மணியிடம் 3,000, போர்மேன் ராதாகிருஷ்ணனிடம், 1,000 ரூபாயை கொடுத்தார். இருவரும் பணத்தை பெற்றபோது, அலுவலக வளாகத்தில் மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
இது குறித்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாரிகள் விசாரணை நடத்திய பின்னர் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment