திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த செவிலியர் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றியது அல்லாமல் மகன் உறவுமுறையில் இருந்த இளைஞரையும் திருமணம் செய்துக் கொண்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தணிகைவேல். முனியம்மாள் அந்த பகுதியில் வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
அவர் கணவரை பிரிந்து தனது மகள் தேவியுடன் தனியாக வசித்து வருகிறார். தேவிக்கு 24 வயதாகிறது. செவிலியல் படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் நோய் வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அவர்களது வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் பணியை தேவி செய்து வந்தார்.
கடந்த 4 மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த தேவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். மகளை காணாமல் தவித்த முனியம்மா, அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப் போன நர்சின் தாயார் முனியம்மா செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்தனர் அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சாய்ராம் என்ற 19 வயதுடைய இளைஞருடன் காணாமல் போனதாக செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் தகவல் தெரிவிக்கையில், மேலும் போலீசார் விசாரணை செய்ததில் நர்ஸ் தேவியும் அந்த 19 வயது இளைஞனும் உறவினர்கள் என தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீவிரமாக இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் காவல் நிலையத்திற்கு ஜோடியாக சரண் அடைந்தனர். அப்போது விசாரணை மேற்கொண்டதில் சாய்ராமுக்கும் தேவிக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக காதல் இருந்து வந்ததாம். அதுமட்டுமின்றி சாயிராமுக்கும் தேவிக்கும் உள்ள உறவு முறையை பற்றி கேட்டு போலீசாரே திகைத்துப் போனார்களாம் அப்படி என்னவான உறவு முறை என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
சாய்ராமுக்கு தேவி சித்தி முறை என்பதால் இந்த காதலுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே மத்தியில் இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வந்ததால் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும், தற்போது நர்ஸ் தேவியும் மகன் உறவு முறையான சாய்ராமும், வழக்கறிஞர் மூலம் இவர்கள் காவல் நிலையத்திற்கு வருவதை அறிந்த தேவியின் தாய்மாமன் மணி என்ற இளைஞர், தேவியும் தானும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கடந்த 3 மாதங்களாக தேவியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க சென்னை சோழவரம் அருகே காரனோடை பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர், தேவியும் தானும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்ததாகவும் தன்னிடம் ரூ 5 லட்சம் வரை ஏமாற்றி பணம் வாங்கியதாக விஜய் என்கின்ற இளைஞர் குற்றம்சாட்டினார். மேலும் தானும் தேவியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் காவல் நிலையத்திற்கு வந்தார் தானும் புகார் அளித்ததாக தெரிகிறது.
இதைக் கேட்டு பதைப்பதைத்து போன போலீசார், தமிழ் திரைப்படமான திருமலை படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் போலீசார் வேடத்தில் நடித்துள்ள வடிவேல் காமெடியில் வருவதை போல் இருந்ததால் போலீஸார் என்ன செய்வதென்றே தெரியாமல் விசாரித்தனர். நர்ஸ் தேவி சுமார் 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
இந்த நிலையில் தேவியை அவரது தாயுடன் செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால் சாய்ராமோ தேவி தன்னுடன் வர வேண்டும் என்றார். காதலியை பிரிய மனமில்லாமல் மகன் உறவு முறையான சாய்ராம் ஏக்கத்துடன் சித்தி முறையான நர்ஸ் காதலியை பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்னர் பெற்றோர் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு காதலியை பார்க்க சென்ற நிலையில் அவரை பெற்றோர் ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தனது லீலைகளால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸாரை பகைத்துக் கொள்ளாமல் தேவி தனது தாய் முனியம்மாவுடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். போலீஸாருக்கு நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அண்மைக்காலமாக தமிழ்நாட்லுள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண ராணியான சத்யாவை தொடர்ந்து பல பெண்கள் பல்வேறு இளைஞர்களையும் அரசு உயர் ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஏமாற்றி கல்யாணம் செய்த கல்யாண ராணி சத்யாவுக்கு மத்தியில் நர்ஸ் தேவி காதல் ராணியாக திகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள இளம் பெண்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பல இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதும். பின்னர் அந்த இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் அதனைத் தொடர்ந்து அந்த காதல் ராணிகள் பல இளைஞர்களை தன் லீலையில் விழுத்தி பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதும். தெரிய வர காவல் நிலையம் போலீஸ் அதிகாரிகள் ஒருவிதமாக சமரசம் செய்து இளைஞர்களை பெற்றோரிடம் பேசி அனுப்பி விடுகின்றனர் அதிலும் சில வழக்குகள் சீட்டிங் வழக்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு காதல் லீலை வீழ்த்தும் நபர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைகின்றனர். எனினும் சிலர் சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த பின்னும் திருந்தாமல் மீண்டும் இதுபோன்று பலரை தன் லீலைகளில் வீழ்த்தத்தான் செய்கின்றனர்.
No comments:
Post a Comment