Tuesday, 12 November 2024

தேனியில்: 3 நியாய விலை கடை அருகில் 1.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறக்கும் படையினரால் பறிமுதல்

போடிநாயக்கனூரில் அரசு நியாய விலை கடைகள் அருகில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் துறை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அரசு நியாய விலை கடை அருகிலுள்ள தெருவில் வார்டு கவுன்சிலர் நடத்திய ஆய்வில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து வந்த உணவு வழங்கல் துறை பறக்கும் படை தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர்கள் ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றி பத்திரமாக எடுத்துச் சென்று கிடங்கில் ஒப்படைத்தனர். 

இங்கு கடை எண் 22, கடை எண் 5, கடை எண் 4 ஆகிய மூன்று அரசு நியாய விலை கடையில் இயங்கி வருகிறது. ஒரு இடத்தில் மூன்று நியாய விலை கடைகள் இயங்கி வருவதால் இப்பகுதியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் நாள்தோறும் அரிசி, கோதுமை, பச்சரிசி, பாமாயில், துவரம் பருப்பு, சீனி போன்ற ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்த அரசு நியாய விலை கடை அருகில் அமைந்துள்ளது ராஜ விநாயகர் திருக்கோவில் அந்த பகுதியில் 20வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் என்பவர் இடிந்து விழுந்த சாக்கடையை ஆய்வு செய்ததற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு ராஜ விநாயகர் கோயிலின் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதி அருகே சுமார் 25க்கும் மேற்பட்ட மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே பிளாஸ்டிக் கொண்டு போர்த்தியிருப்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதை அப்புறப்படுத்தி பார்த்தபொழுது அவைகள் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக உணவு வழங்கல் துறை பறக்கும் படையினருக்கு கவுன்சிலர் வெங்கடேசன் தனது தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த நிலையில். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பறக்கும் படை துணை வட்டாட்சியர் பரமசிவம் மற்றும் வருவாய் அலுவலர் சுரேந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தபோது, அவை ரேஷன் அரிசி என்பதும், சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் யார் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பார் என்று விசாரித்தபோது, யாரும் சரிவர பதில் கூறாத நிலையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் ஒன்றரை டன் மதிப்புள்ள 29 மூடை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, உடனடியாக லோடு ஆட்டோவில் ஏற்றப்பட்டு போடிநாயக்கனூர் மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உணவு வழங்கல் துறை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஏற்கனவே ஒரே இடத்தில் மூன்று அரசு நியாய விலை கடைகள் அமைந்துள்ள நிலையில், இப்பகுதியில் ரேஷன் அரிசி வாங்கும் இடைத்தரர்கள் அதிகளவில் சுற்றித் திரிவதாகவும், ரேஷன் அரிசி வாங்க வரும் நபர்களிடமும் ரேஷன் கடைகளிலும் இவர்கள் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று அதிக விலைக்கு கேரளாவிற்கு மற்றும் பிற இடங்களுக்கு விற்று வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது போன்று சட்டவிரோதமாக நியாய விலை கடை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலத்தில் கொண்டு சென்று விற்கும் செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து பிணையில் வெளிவராத அளவிற்கு சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவர் கதறி அழுது கோரிக்கை மனு!

பொதுமக்கள் நடமாடும், பொது தெரு வழியை தனிப்பட்ட இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பு  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் முதியவ...