Tuesday, 11 March 2025

உள்ளி கிராமத்தில் நாராயணி நகர் என்பதை பெயர் மாற்றி வெற்றி நகர் என பொதுமக்களை ஏமாற்றி வீட்டுமனைகளை விற்கும் கும்பல்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், குடியாத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட உள்ளி கிராமத்தில் லட்சுமி குரூப்ஸின் நாராயணி நகர் என்ற ஒரு வீட்டுமனை பிரிவை உருவாக்கி கடந்த 15 ஆண்டுகளாக விற்க முடியாமல் திணறி வந்தனர். இதனை ரூபாய் 200 என சதுர அடி விலை என்று கூறி முக்கி முக்கி விற்பனை செய்து பார்த்தனர். ஆனால் விற்பனை செய்ய இயலாமல் போனது. இந்நிலையில் இந்த பெயரை நாராயணி நகர் என்பதை வெற்றி நகர் என மாற்றி பொதுமக்களை ஏமாற்றி அவர்கள் காதில் பூச்சுற்றி மூளை சலவை செய்து இந்த வெற்றி நகர் மனைப்பிரிவை ரூபாய் 200 க்கு சதுர அடியை விற்க முடியாத நபர்கள் தற்போது ரூபாய் 450 க்கு சதுர அடி என ஒரே அடியாக இரு மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த தகவல் காட்டு தீ போல அந்த பகுதி வாழ் மக்களிடம் பரவியது. அத்துடன் உள்ளி கிராமத்தில் தொடங்கி குடியாத்தம் நகர் வரை இந்த மனை பிரிவிற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதில் சுவர் விளம்பரங்கள் மற்றும் மரங்கள் மற்றும் கட்டடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதை நம்பி பலர் இந்த மனை பிரிவை நாடிச் சென்று பார்த்துவிட்டு சென்ற வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இந்த மனை பிரிவின் மேலாளரை தொடர்பு கொண்டு கேள்வி கேட்டால் நாங்கள் அப்படித்தான் பெயர் மாற்றி விற்பனை செய்வோம். ஆனால் பத்திரப் பதிவு செய்யும்போது நாராயணி நகர் என்று வந்துவிடும் என்று கூலாக பதில் கூறுகின்றார் இந்த தெனாவெட்டு ஆசாமி. இதை நம்பி பலர் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். இந்த மனைப்பிரிவில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளது தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் பிடிஓ சரவணன் மற்றும் உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இந்த மனைப்பிரிவில் இருந்த வெற்றி நகர் என்ற பெயர் பலகையை எடுத்துவிட்டு நாராயணி நகர் என்று வைக்க வேண்டும் என்றும் அங்கு நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களையும் அகற்றிவிட்டு வந்தனர். இந்நிலையில் மறுநாளே பிடிஓவின் உத்தரவை மீறியும், ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவை மதிக்காமலும் மீண்டும் வெற்றி நகர் என்று பேனர்களை வைத்துக்கொண்டு மனை பிரிவு விற்பனை செய்ய அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது இந்த லட்சுமி குரூப்பின் வெற்றி நகர் என்ற மனைப்பிரிவின் மேலாளர் மற்றும் விற்பனையாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி பொதுமக்களை குழப்பி அதில் ஆதாயம் பார்க்க முயற்சி செய்கின்றனர் இந்த வீட்டுமனை பிரிவை விற்பனை செய்ய வந்துள்ள நபர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இதே போன்று நாங்கள் என் ஹெச் நகர், திருவிழா நகர் என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்துள்ளோம் என்று வேறு தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். இப்படி இவர்கள் என்னென்ன இடங்களில் என்னென்ன கோல்மால்கள் செய்தார்கள் என்பது இன்னும் தெரிய வரவில்லை. இவர்களைப் பற்றி விசாரித்தால் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது .ஆக மொத்தத்தில் ஒரு பிடிஓ சொன்னதையும், ஊராட்சி மன்ற தலைவர் சொன்னதையும் கேளாமல் இவர்கள் தான் தோன்றித்தனமாக தங்களது விருப்பம் போல இந்த வீட்டுமனைகளை பெயர் மாற்றி விற்பனை செய்ய முடிகின்ற முயற்சி செய்து வருகின்றனர். ஆதலால் இதில் உள்ள தில்லு முல்லுகளை அறிந்து கொண்டு இந்த வீட்டு மனை விற்பனை செய்வதை அடியோடு தடுத்து நிறுத்தவும் இந்த இடத்தை மூடி சீல் வைக்கவும் குடியாத்தம் பீடிவோ சரவணன் மற்றும் உள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் ஆரம்பத்திலேயே அதாவது முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. திங்கட்கிழமை (10ம் தேதி) என்ன நடக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்

விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...