Monday, 3 March 2025

திருப்பத்தூரில் வேலைக்காக வைத்த பெண் அரசு அதிகாரியை தன் வலையில் வீழ்த்தி ரூ. 2 1/2 லட்சம் பணம் பறித்ததில் கூட்டாளிகளுடன் கைது!

அரசு அதிகாரி என்றும் பாராமல் 2 பெண்கள் செய்த காரியம், திருப்பத்தூரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைதாகியுள்ள நிலையில், அந்த 3 பேருமே வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவருபவர் மாதேஸ்வரன்  இவரது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை நிலையில் தான்.

தன்னுடைய அம்மாவை பராமரிப்பதற்காக, "சன் லைட் ஹோம் கேர்" என்ற நிறுவனத்தில் பணியாற்றும் நளினி என்பவரை வேலைக்கு வரவழைத்துள்ளார். இதனால் வீட்டிலேயே நளினி தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நளினிக்கும், மாதேஸ்வரனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் நளினி.. இதற்காக மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்து கொண்டு, "சன் லைட் ஹோம் கேர்" நடத்தும் செல்வி என்பவருக்கு அனுப்பி வைத்தார்.

உடனே செல்வி, அந்த நிர்வாண வீடியோவை, மகேந்திரனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்து, 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன மகேந்திரன், முதல்கட்டமாக 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தந்துள்ளார்.

ஆனால், மிச்ச பணத்தையும் உடனே தந்தாக வேண்டும் என்று செல்வி தொந்தரவு செய்தாராம். தன்னிடம் பணம் இல்லை என்று மாதேஸ்வரன் சொன்னதால், ஆத்திரமடைந்த செல்வி, தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்பூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவரை, மகேந்திரன் வீட்டுக்கு அனுப்பி பணம் வாங்கி வர சொல்லி உள்ளார்.

பணம் வாங்குவதற்கு, வீட்டுக்கே ஆள் வந்து நிற்பதை கண்டு பயந்துபோன மாதேஸ்வரன், போலீசுக்கு ஓடினார். அப்போதுதான், நளினி, செல்வி 2 பெண்களும் சேர்ந்து பிளான் போட்டு, மாதேஸ்வரனிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து விமல்ராஜ் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அரசு அதிகாரியான தலைமை அஞ்சலகத்தின் கண்காணிப்பாளரையே நிர்வாண வீடியோ எடுத்து 2 பெண்கள் மிரட்டிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...