Monday, 3 March 2025

பேரணாம்பட்டில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் காட்டு யானைகள்: மெத்தனமாக செயல்படும் வனச்சரகர் சதீஷ்குமார்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பங்களாமேட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளும் பித்தலாட்ட வேலைகளும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக பேரணாம்பட்டைச் சுற்றியுள்ள. கோட்டையூர், எருக்கம்பட்டு, அரவட்லா, குண்டலபள்ளி, கமலாபுரம் போன்ற கிராமங்களில் காட்டு யானைகள் அவ்வப்பொழுது வந்து கரும்பு தோட்டங்களையும். தென்னை மரங்களையும், நெற்பயிர்களையும் நாசப்படுத்தி விட்டு செல்கிறது. ஒரு சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து பசுக்களை கொன்றும், பொது மக்களை பயமுறுத்திவிட்டும் செல்கிறது. இந்த நிகழ்வுகள் ஒரு நாள் அல்ல, ஒரு வாரம் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஒரு வருடமல்ல, பல வருடங்களாக தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டு யானை ஒன்று தனது துதிக்கையால் தூக்கி வீசி எறிந்தது. அந்தப் பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு களேபரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் வனச்சரகர் சதீஷ்குமார் காட்டில் ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் போன்றவர்களிடமும், பத்திரப்பள்ளி சோதனை சாவடியில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் போன்ற இடங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கும், வேலூர் மார்க்கெட்டிற்கும் தினமும் காய்கனிகளை ஏற்றிவரும் வாகனங்களை மிரட்டி லஞ்சம் வசூலிப்பதிலும், காட்டில் வாழும் முயல், முள்ளம்பன்றி, மான் போன்றவைகளை ஐந்து பேர் வேட்டையாடினால் மூன்று பேரை மட்டும் கணக்கில் காட்டி மீதம் இரண்டு பேர்களின் வசூல் பணத்தை சுருட்டி கொள்வதிலும் பேரணாம்பட்டு மரப்பட்டறைகளில் காட்டு விறகுகளை விற்பனை செய்யும் மரப்பட்டறை உரிமையாளர்களிடம் ரவி என்ற வன ஊழியரை அனுப்பி லஞ்சம் வசூலிப்பதிலும் ஆர்வம் செலுத்துகிறார் வனச்சரகர் சதீஷ்குமார். காட்டு யானைகள் அட்டகாசம் செய்யும் சம்பவத்தில் ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஒரு வேலையையும் செய்யாமல் தண்டச் சம்பளம் பெற்று தனது பசியையும் தனது குடும்பத்தின் பசியையும் ஆற்றிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. வனச்சரகர் சதீஷ்குமார் போன்றவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் சம்பளத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய கடமையை நூற்றில் ஒரு பங்கு கூட செய்யாமல் நன்றாக மூக்குப்பிடிக்க சாப்பிட்டுவிட்டு தண்ட சம்பளம் பெறுவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களிலாவது வனச்சரகர் சதீஷ்குமார் தான் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக வேலை செய்ய வேண்டும் என்பதே பேரணாம்பட்டு நகர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...