Monday, 3 March 2025

மேல்மாயில் பகுதியில் நிலத்திற்கு செல்லும் ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள விஷமிகள்!

வேலூர் மாவட்டம், கே. வி .குப்பம் தாலுகா, கே. வி. குப்பம் ஊராட்சி, மேல்மாயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி. ராஜேஷ் குமார். இவர் ராணுவ வீரர் ஆவார். அவருக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்கு உட்பட்ட சர்வே எண் 230 உட்பிரிவு 1Bயிலுள்ள 90 சென்ட் நிலம் ஆகும். இந்த நிலத்திற்குச் செல்லும் வழியில் ஓடை நீர்வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் சில விஷமிகள். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை புகார் மனுவை அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காமல் வருவாய்த்துறை அலட்சியம் காண்பித்து வருகிறது. இது குறித்து மீண்டும் 101வது முறையாக வேலூர் மாவட்ட ஆட்சியாளரிடம் நேற்று நடந்த திங்கள் மனுவில் புகார் செய்துள்ளார் ராணுவ வீரர் ராஜேஷ் குமார். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர் சுப்புலட்சுமி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் இந்த இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதாகவும், விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த ராணுவ வீரர் வீட்டிற்கு திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...