வேலூர் மாவட்டம், காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் துணைத்தலைவர் இரா.சீனிவாசனுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதற்கான விழா தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் தறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான `தமிழ்ச் செம்மல் விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருள் வரவேற்புரை ஆற்றினார். துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., தொடக்கவுரை ஆற்றினார்.
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்.
வேலூர் மாவட்டம் சார்பில் குமரன் இரா.சீனிவாசனுக்கு விருது வழங்கப்பட்டது. அவரை அமைச்சர் துரைமுருகன், டாக்டர்கள் குமரகுரு, இக்ராம். இனியன் சமரசம். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ரோட்டரி தலைவர் பி.என்.ராமசந்திரன். வேலூர் கவிஞர் ம.நாராயணன். உள்பட பலர் வாழ்த்தினார்கள். விருதுபெற்ற சீனிவாசன், குமரன் மருத்துவமனை மேலாளராகவும், ரெட் கிராஸ் சங்க துணைத் தலைவராகவும், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க பொருளாளராகவும் உள்ளார்.
No comments:
Post a Comment