சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் ஜி.ஜி. சிவா நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியது மட்டுமில்லாமல் சீமான் மீது புகார் கொடுத்த நடிகை பற்றி அவதூறாக பேசியுள்ளார் என்று கூறினார்.
குறிப்பாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சீமான் தைரியமாக பொதுமக்கள் மத்தியில் சவால் விட்டுக்கொண்டு வெளியில் சுற்றி வருகின்ற காரணத்தினால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீமான் மீது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் சம்மன் மட்டும் அனுப்பி வரும் நிலையில், இன்னும் போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment