Monday, 3 March 2025
வேலூரில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்!
வேலூரில் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக்கொண்டு கொடிகட்டி பறக்கிறது விபச்சார தொழில். வேலூர் வள்ளலார் பகுதியில் வசிப்பவர் பானுப்பிரியா(31) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பலரை வீட்டுமனை மற்றும் நிலம் ஆகியவற்றை விற்பனை செய்வதாகவும், பழைய மற்றும் புதிய வீடுகளை வாங்குவது, விற்பது என்று தொழில் செய்து வருவதாக வெளியில் கூறிக்கொண்டு பலரை நம்ப வைத்து ஏமாற்றி நாடகம் ஆடி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக்கொண்டு யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்கிறார்களோ அவர்களை நாடிச் சென்று தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறார் இவர். இந்த விபச்சார தொழிலில் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இவரது கஸ்டடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார். இவர்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5,000 வரையும் ,வெளியில் அழைத்துச் செல்பவர்களுக்கு ரூபாய் 10000 ஆயிரம் வரையிலும் வசூல் செய்கிறார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு இந்த தொழில் அமோகமாக நடைபெறுகிறது. ஆனால் வெளியில் சொல்வது என்னமோ ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிக்கொண்டு இந்த இளம் பெண்களை அழைத்துக்கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக இவரால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பணம் பறிப்பதை ஒன்றையே தொழிலாக கொண்டு இவர்கள் செயல் படுவதாகவும் தெரிய வருகிறது. இவர் கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளோடு ஒரு மகன், ஒரு மகளோடு வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் செய்யும் தொழிலோ இப்படி ஒரு விரும்பத்தகாத தொழில் என்று தெரியவந்துள்ளது. வேலூரில் தற்போது எளிதில் சம்பாதிக்க இந்த விபச்சார தொழிலை பயன்படுத்திக் கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இவர் ஆட்டோ மற்றும் கார்களில் மட்டுமே பயணம் செய்வாராம். மற்ற எந்த வாகனங்களிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. விரைவில் இவருக்கு காவல்துறை காப்பு கட்டுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று
தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment