Monday, 3 March 2025

பெரம்பலூரில் புதிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்ய ரசீது வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற நகராட்சி பில் கலெக்டருடன், இடைத்தரகர் கைது!

அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்கிறார்கள். அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசில் மக்கள் புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. தங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில் மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதை எதிரொலிக்கும் விதமாக அடிக்கடி யாராவது ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்கிறது. மக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்காமல், அவர்கள் மீது முறையாக புகார் அளிக்க தொடங்கினால், லஞ்சம் கேட்பது கண்டிப்பாக குறைந்துவிடும். பெரம்பலூரில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி சாலை பகுதியில் வேல்முருகன் என்பவர் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். அந்த வீடு கட்டும் பணிகளை கவனித்து வந்த அவரது நண்பரான சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மூலம் வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக மாட்டி விட திட்டம் தீட்டியுள்ள சுபாஷ் சந்திரபோஸ், 

வேல்முருகன் என்பவர் பெரம்பலூர்-ஆலம்பாடி சாலை பகுதியில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீடு கட்டும் பணிகளை பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் தெருவைச் சோ்ந்த ரெங்கசாமியின் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 35) என்பவர் கவனித்து வந்துள்ளார். இவர் வேல்முருகனின் நண்பர் ஆவார். சுபாஷ் சந்திரபோஸ் மூலமாக வேல்முருகன், தனது புதிய வீட்டிற்கு வரி ரசீது வழங்குவதற்கு அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பில் கலெக்டராக பணிபுரியும் புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகர் எஸ்.எம்.காலனியைச் சேர்ந்த 54 வயதாகும் சிவக்குமார் மற்றும் இடைத்தரகரான பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரைச் சேர்ந்த 38 வயதாகும் ராமு ஆகியோர் சுபாஷ் சந்திரபோசிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுபாஷ் சந்திரபோஸ் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை சுபாஷ் சந்திரபோசிடம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கொடுத்தனுப்பினார்கள். அதனை சிவக்குமார், ராமுவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தாரக்ள். அதன்படி சுபாஷ் சந்திரபோஸ் பெரம்பலூர்-துறையூர் சாலையிலுள்ள நகராட்சி வரி வசூல் மையத்திற்கு சென்றார். பின்னாடியே லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும் அங்கு மாறுவேடத்தில் சென்றார்கள்.

தொடர்ந்து அவர்கள் அந்த அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அங்கு சுபாஷ் சந்திரபோசிடம் இருந்து பணத்தை இடைத்தரகர் ராமு வாங்கி சிவக்குமாரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று சிவக்குமார், ராமு ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சி வரி வசூல் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

தமிழக தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிரடி காட்டியதில் கணக்கில் காட்டப்படாத பணம் ஆவணங்கள் கைப்பற்று

தமிழ்நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை...