Tuesday, 11 March 2025
வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு - விவசாயிகள் வேதனை மீட்டு தருவாரா வேலூர் மாவட்ட ஆட்சியாளர்?
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் அமைத்துள்ள ஏரியின் பரப்பளவு 13 ஹெக்ட்டர் 55.5.எர் (33 ஏக்கர்). இந்த ஏரி பஞ்சாயத்து யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த எரியின் மூலம் வளத்தூர் கிராமத்தில 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கிராமத்தின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.கடந்த 3, ஆண்டுகாலமாக பாலாற்றில் தண்ணீர் வந்தும் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவில்லை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது விவசாய நிலங்கள் வீட்டுமனை பிளாட்டாகமாறி உள்ளன.ஏரியை அப்பகுதியிலுள்ள நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். இதனால் எரியின் பரப்பளவு குறைந்து குட்டை போல் உள்ளது. ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமைப்பை அகற்றி, ஏரியை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி, ஏரிக்கு வரும் வரத்து கால்வாய், மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களை சீர்திருத்தி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமி அவர்கள் விவசாய பொதுமக்கள் நலனை கருதி ஏரியை மீட்டு தருவார்களா என்று வளத்தூர் ஊர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு? இதுகுறித்து வளத்தூர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இ.சேகரன் வேலூர் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனுவாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விஜிலென்ஸ் போலீசாரின் வளையத்துக்குள் கலால் உதவி ஆணையர்: காரில் சிக்கியது ரூ.3.75 லட்சம் கைப்பற்றல்
விருதுநகரில் ரூ.3.75 லட்சத்துடன் காரில் சென்ற மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் கணேசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றன...
-
வேலூரில் பட்டப் பகலில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம். இருசக்கர வாகனத்தில் அழகிகளை அழைத்துக் கொண்டு விடுதிகளுக்கு செல்லும் இளைஞர...
-
பட்டா மாறுதலுக்கு ரூ. 5000 கேட்கும் தாராபடவேடு விஏஓ பவிதா.? வசூல் வேட்டை படு ஜோர் தாராபடவேடு. விஏஓ பவிதா வ...
-
நாள் ஒன்றுக்கு ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் மேல் லஞ்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பிலிருக்கும் சார்பதிவாளர்கள்..? கண்டுகொள்ளாத வ...
No comments:
Post a Comment