Saturday, 1 February 2025

திமுக பெண் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், சமீபத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் மன்ற கூட்டத்தை புறக்கணித்து  கெங்குவார்பட்டி பேரூராட்சி  தலைவராக உள்ள தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு தீர்மானக் நகலை  செயல் அலுவலரிடம் ஒப்படைத்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்விக்கு எதிராக, துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மாவட்ட ஆட்சியாளர் ஷஜீவனாவிடம் மனு அளித்துள்ளனர்.

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க.,- 11, அ.தி.மு.க.,- 3, ம.தி.மு.க.,-1 வெற்றி பெற்றனர்.

இதில் 6வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி (தி.மு.க.,), தலைவராகவும், 10வது வார்டு கவுன்சிலர் ஞானமணி( தி.மு.க.,) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூக உறவு இருந்தது. அதன்பின் பேரூராட்சி மன்றக்கூட்டம் முறையாக நடத்தாதது, வார்டுகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டரைச் தேர்வு செய்வது உட்பட பல விஷயங்களில் தலைவர், துணைத்தலைவர் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர். தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூகமான உறவு இல்லாததால் பேரூராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் கடந்த 34 மாதங்களில் கெங்குவார்பட்டி பேரூராட்சியின் 7 செயல் அலுவலர்கள்  மாறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29-01.2025 அன்று துணைத் தலைவர் ஞானமணி தலைமையில் கவுன்சிலர்கள் 7 பேர், மாவட்ட ஆட்சியாளரிடம், பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன், சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சரவணக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.

அதுமட்டுமின்றி இதே பேரூராட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய செயல் அலுவலர் வீடியோ குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கெங்குவார்பட்டி பேரூராட்சி பெண் செயல் அலுவலர் அங்கு பணிபுரியும் ஆண் தூய்மைப் பணியாளரை தரக்குறைவாகப் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களைத் தனது அலுவலக பணிக்குப் பயன்படுத்தியது குறித்து கேள்வி எழுப்பியதால் பெண் செயல் அலுவலர் வசைபாடித் திட்டியதாக தெரிகிறது.

இது தொடர்பாக அப்பது பேரூராட்சி பெண் செயல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

“உனக்கு என்ன வேலை சொல்லியிருக்கறனோ அதை மட்டும் தான் நீ செய்யனும். ஒருத்தன் பன்றி மேய்த்தால் நீ பன்றி மேப்பியா…” என்று அந்த செயல் அலுவலர், தூய்மைப் பணியாளரை தரக்குறைவாகச் சாதிய ரீதியாகத் தாக்கிப் பேசுவது காணொளியில் பதிவாகியுள்ளது. தனக்கு அலுவலக பணிகள் தரப்படுவதை எதிர்த்து “நான் ஸ்வீப்பர் தான்” என்று தூய்மைப்பணியாளர் கேள்வி கேட்பதும் அதில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பல பேரூராட்சிகளில் இது போன்று தூய்மைப் பணியாளர்கள் சொல்லொன்னா துயரங்களை தினமும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக சாதி ரீதியாக அவர்களைத் தாக்குவதும் அணுகுவதும் நடைமுறையாகவே உள்ளது.


No comments:

Post a Comment

மதுரை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகிரி கலெக்டராக பிரமோஷன்!.. 71வது புதிய ஆணையாளராக சித்ரா விஜயன், ஐஏஎஸ்., நியமனம்..!!

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாநகராட்சியில் சொத்து வர...